அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான வேலை



Suhaib Umarlebbe

அக்கரைப்பற்று தேசிய பாடசாலைக்கு இரண்டு மாடிகளைக் கொண்ட 15 வகுப்பறைக் கட்டிடங்களைக் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டினை கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.

புதிய வகுப்பறைக் கட்டிடங்களைக் கட்டுவதற்கான வேலைகள் 2017.03.31
ஆந் திகதி வெள்ளிக் கிழமை காலை  8.45 மணியளவில் துஆப் பிரார்தனையுடன் அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளரான ஜனாப்.சுபைதீன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப்.அல்-ஹாஜ்.A.L.M.காசிம் அவர்களும், அக்கரைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐனாப்.M.A.கலீலுர் றஹ்மான் அவர்களும்,  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் இணைப்பாளர் ஜனாப்.அல்-ஹாஜ்.A.L.M.மர்ஜுன் அவர்களும்,  SDS உறுப்பினர்களும், ஆசிரியர்கள், மாணவர்கள் என  பலரும் அதில் கலந்து சிறப்பித்தனர்.