டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய பெருங்கடல் நாடுகளுக்கான வெளியுறவுத்துறை இணை செயலாளர் சஞ்சய் பாண்டா இதனைத் தெரிவித்தார். புத்தரின் வாழ்க்கையையும், தத்துவத்தையும் உணர்த்துவம் விதமாக நடைபெறும் சர்வதேச விழாவான வெசாக் தினம், இந்த ஆண்டு இலங்கையில் கொண்டாடப்பட இருக்கிறது.
இலங்கை முதல்முறையாக கொண்டாடும் இந்த விழாவில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பில் நடைபெற உள்ள 14வது சர்வதேச வெசாக் தின விழாவின் தலைமை விருந்தினராக நரேந்திர மோடி கலந்து கொள்ள இருப்பதாக சஞ்சய் பாண்டா தெரிவித்தார்.
மேலும், இதை ஒட்டி நடைபெற உள்ள புத்த மத மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பயணத்தின்போது, இலங்கையில் தமிழர்கள் வாழும் கண்டி நகருக்கு செல்லும் நரேந்திர மோடி, அங்குள்ள தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார். அதோடு, இந்திய நிதி உதவியின் கீழ் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவமனை ஒன்றினையும் அவர் திறந்து வைக்கிறார்.


Post a Comment
Post a Comment