சிலாபத்தில் பாரிய தொகை ஹெரோய்ன்



198 கிலோ கிராம் நிறையுடை ஹெரோய்ன் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று அதிகாலை சிலாபம், முத்துபந்திய தீவில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. 

கடல் வழியாக குறித்த போதைப் பொருளை முத்துபந்திய தீவிற்கு கொண்டு வந்து, அங்கிருந்து டிபெண்டர் ரக சொகுசு வாகனத்தில் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்ததாக சுற்றிவளைப்பை நடத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள், வாகனம் என்பனவும் தற்போது சிலாபம் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.