சுற்றறிக்கைக்கு அப்பால் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பணியாற்றுக



சுற்றறிக்கைக்குள் வரையறைபடாது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (27) காலை நடைபெற்ற களுத்துறை மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை மாவட்ட செயலாளர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.