சட்டத்திற்கு புறம்பாக யாரும் செயற்பட முடியாது



சாதாரணமானவர்களுக்கோ, மதப்பெரியார்களுக்கோ யாராகினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

சட்டத்தை முறியடிக்கும் அல்லது அதனை கவனத்தில் கொள்ளாது யாராலும் செயற்பட முடியாது. 

நாம் அனைவரும் சட்ட திட்டங்களுக்கு செயலாற்றுவதற்கும் சட்டத்தை நிலைநாட்டுவதற்கும் கடமைப்பட்டுள்ளோம். 

பிரதமர் நேற்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற ரமழான் நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். 

கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்தங்களின் காரணமாக சில இஸ்லாமிய நண்பர்கள் இப்தார் நிகழ்வுகளை நடத்தாது அந்த நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்கள். 

முழு இலங்கையர்களுக்காகவும் தான் அவர்கள் அந்த நிதியை நன்கொடையாக வழங்கினார்கள். 

அந்த வகையில் குறித்த நன்கொடைகள் கிராமப்புறங்களில் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கே பெரும்பாலும் கிடைத்தன. 

இதனை விசேடமாக சுட்டிக்காட்ட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.