இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கலந்துரையாடலின் போது மோதல் ஏற்பட்டுள்ளது.
வைத்தியர் ஒருவரை மற்றுமொரு வைத்தியர் தாக்கியபோதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான வைத்தியர் தேசிய வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment