களுத்துறை மாவட்டத்தில், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட புளத்சிங்கள, யட்டகம்பிற்றிய மற்றும் நாஹகதொல பிரதேசங்களுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (05) முற்பகல் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்தார்.
அங்கு, அழிவடைந்த வீடுகள் மற்றும் காணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார். இதேவேளை, உலக சுற்றாடல் தினத்தையொட்டி, சுற்றாடல் அமைச்சினால் அப்பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
இராணுவத்தினர் மற்றும் சீன உதவிக் குழுவின் பங்களிப்புடன் இந்தச் சிரமதான நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment
Post a Comment