20 தனி வீடுளை அமைப்பதற்கான அடிக்கல்



(க.கிஷாந்தன்)

அட்டன் அபோட்சிலி ஆனைத் தோட்ட மக்களுக்கு பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் 20 தனி வீடுளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் 20-07-2017 அன்று இடம்பெற்றது.

வீடுகள் இல்லாதவர்களுக்காக அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் பணிப்புக்கு அமைய மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 2 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீட்டில் இவ் வீடமைப்பு திட்டம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் அமைச்சர் திகாம்பரம், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், எம்.ராம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பொதுச் செயலாளர் எஸ்.லோரன்ஸ், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப் உட்பட முக்கியஸ்தர்கள் வரேவேரற்கப்படுவதையும், பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்படுவதையும், கலந்து கொண்ட பொது மக்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.