அம்பாறை திராய்கேணி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்வண்டியில் பிரயாணித்துக் கொண்டிருந்த ஒருவர் அந்த பஸ்வண்டி நடத்துநர் மீது நேற்று (19) இரவு கத்திக்குத்து தாக்குதலில் நடத்தியுள்ளார்.
இதில் நடத்துனர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்திய வரை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
இது பற்றி தெரியவருவதாவது
களுவாஞ்சிக்குடி - இலங்கை போக்குவரத்து சாலைக்கு சொந்தமான பஸ்வண்டி நேற்றிரவு 6.30 மணிக்கு பொத்துவில்லில் இருந்து மட்டக்களப்பிற்கு பயணித்துக் கொண்டிருந்தது.
அதன்போது, அக்கரைப்பற்று பகுதியில் இருந்து பெண் ஒருவர் ஏறி பஸ்வண்டி மிதிபலகையில் பிரயாணம் செய்தபோது அவரை உள்ளே வருமாறு நடத்தனர் தெரிவித்த நிலையில் அந்த பெண் அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த பெண் தனது உறவினர் ஒருவருக்கு கைத்தொலைபேசியில் உரையாடிய நிலையில் அக்கரைப்பற்றில் இருந்து சுமார் 4 கிலோமீற்றர் தூரம் பஸ்வண்டி சென்று கொண்டிருந்தது.
அட்டாளைச்சேனை திராய்க்கேணி பகுதியில் பஸ்வண்டியை முந்திச் சென்ற பட்டா வாகனம் ஒன்றில் வந்த அப் பெண்ணின் சகோதரியின் கணவர் பஸ்வண்டியை நிறுத்தி அதில் ஏறி பஸ்நடத்துனர் மீது கத்தியால் குத்தியுள்ளார்.
இதில், படுகாயமடைந்த நிலையில் நடத்துனர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கத்தியால் குத்தி பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment
Post a Comment