கல்முனையில் மாடு மேய்க்கச் சென்றிருந்த நபர் சடலமாக



கல்முனை – பாண்டிருப்பு, பெரியகுளத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (13) இரவு இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாடுகளை மேய்ச்சலுக்காகக் கொண்டு சென்றிருந்த குறித்த நபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
43 வயதான நற்பிட்டிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீண்ட நேரமாக இவரைக் காணாததால் தேடிச்சென்ற சக மேய்ப்பாளர்கள் அவர் உயிரிழந்திருந்ததைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நீதவானின் அனுமதியுடன் சடலம் மீட்கப்பட்டு, விசாரணைகளின் போது சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.