பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி



மீகலெவ - லஸ்ஸனகம பகுதியிலுள்ள விஹாரையில் பொருட்களை கொள்ளையிட வந்ததாக கூறப்படும் ஒருவர், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். 

இருவர் விஹாரையில் கொள்ளையிட மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருப்பதாக, கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, பொலிஸார் அதனை நிறுத்தி பரிசோதித்தனர். 

இதனையடுத்து, பொலிஸார் மீது கொள்ளையர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். 

எனவே, பொலிஸாரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதன்போது, இரு கொள்ளையர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், மற்றையநபர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

சந்தேகநபர்கள் வசம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மீகலெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.