மின் விநியோகம் மீண்டும் வழமைக்கு



கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் மின்பிறப்பாக்க இயந்திரம் செயலிழந்தமையால் பல்வேறு பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையத்தின் 150 மெகாவோட் மின்சாரத்தை பிறப்பிக்கும் இயந்திரமொன்றே நேற்றிரவு செயலிழந்ததாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
எனினும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்க இயந்திரமொன்று தொடர்ந்தும் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
வறட்சியுடன் நீர் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளும், 20 வீதமாகக் குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், இந்த நிலைமையின் கீழ், எவ்விதத்திலும் மின்சார விநியோகத்தை துண்டிப்பதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
குறிப்பாக மாலை 6.30 க்கும் இரவு 10.30 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு மக்களிடம் கேட்டுள்ளது.