#வெங்கையா நாயுடு,இந்தியாவின் துணைத் தலைவர்



குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றுள்ளார். வெங்கையா நாயுடு 516 வாக்குகளும், கோபாலகிருஷ்ண காந்தி 244 வாக்குகள் பெற்றனர். இதனையடுத்து 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெங்கையா நாயடு வெற்றி பெற்றதாக அறவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் 15-வது துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் கடந்த மாதம் 17ம் தேதி நடந்து முடிந்தது. இதில் பாஜ வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். 

இந்த சூழலில் ஹமீத் அன்சாரி பதவிக்காலம் வருகிற 10ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்குபதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பாஜ கூட்டணி சார்பில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்கட்சிகள் சார்பில் காந்தியின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தி போட்டியிட்டனர். கட்சி வேறுபாடு இன்றி எம்பிக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். மொத்தம் 785 வாக்குகளில் 771 வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 11 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.