துன்னாலையில் விசேட சுற்றிவளைப்பு



யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியில் இன்று விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று காலை முதல் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துன்னாலையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து, பொலிஸ் காவலரண் தாக்கப்பட்டமை மற்றும் டயர்கள் எரிக்கப்பட்டமையைக் கருத்திற்கொண்டு இன்று சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 10 மோட்டார் சைக்கிள்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதை அடுத்து, நாளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.