சூதாட்டம் மற்றும் பந்தய நிறுவனமொன்றுடன் தமக்கு தொடர்பு



இலங்கையின் சூதாட்டம் மற்றும் பந்தய நிறுவனமொன்றுடன் தமக்கு தொடர்புள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால ஏற்றுக்கொண்டதாக ”சிலோன் டுடே” பத்திரிக்கை இன்று செய்தி வௌியிட்டுள்ளது.
அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராக திலங்க சுமதிபால தாக்கல் செய்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டமை தொடர்பிலான வழக்கின் அறிக்கைக்கு அமைய, திலங்க சுமதிபால சூதாட்டம் மற்றும் பந்தய நிறுவனமொன்றுடன் தமக்கு தொடர்புள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளதாக சிலோன் டுடே பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கின் குறுக்கு விசாரணைகளின் போது திலங்க சுமதிபால இந்த விடயத்தை தெரிவித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் இலங்கையின் விளையாட்டுத்துறை சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளது என சிலோன் டுடே பத்திரிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சூதாட்டம் மற்றும் பந்தய நிறுவனமொன்றுக்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை விசேட விசாரணையை நடத்த வேண்டும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.