மண்சரிவு அபாய எச்சரிக்கை



நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தேசிய கட்டிட ஆய்வுகள் நிலையத்தினால் கேகாலை, களுத்துறை மற்றும் ரத்தினபுரி மாவட்டங்களின் மண்சரிவு அபாயம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை குறித்த பிரதேசங்களில் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது நிலவும் மழை காலநிலை தொடர்ந்தால் மண்சரிவு, கற்கள் புரள்தல், நிலத்தாழ்வு அனர்த்தங்கள் தொடர்பாக எச்சரிக்கையாக செயற்படும் படி தேசிய கட்டிட ஆய்வுகள் நிறுவனம் அறிவித்துள்ளது.