ஆசிரியர் நியமனங்கள்



இலங்கையில் 19 கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறிய டிப்ளோமாதாரிகள் 3626 பேருக்கான ஆசிரியர் நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று(20) அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்,கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்,கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டிஆராச்சி,கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.