(வாழைச்சேனை நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் ஆயிரம் புற்று நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மார்பகப் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஏ.இக்பால் தெரிவித்தார்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மார்பகப் புற்று நோய் மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது மாவட்டத்தில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் புற்று நோயாளர்கள் தொகை அதிகரித்து காணப்படுகின்றது. இந்நோயை ஆரம்பத்தில் கண்டறிவதன் மூலம் இந்நோயில் இருந்து பாதுகாப்பை தேடிக் கொள்வதுடன், நோய் மேலும் பரவாமல் தவிர்த்துக் கொள்ள முடியும்.
இலங்கையில் கடந்த வருடம் இணங்காணப்பட்ட புற்றுநோயாளர்களின் மொத்த தொகை இருபத்தி எட்டாயிரம், அத்தொகையை விட இந்தவருட் கூடுதலாக அதிகரித்துக் காணப்படும். இந்நோய் பரபுவதற்கு நமது உணவுப் பழக்கங்களும், பரம்பரையும் ஆகும்.
இந்நோயை கணப்படுத்த முடியாது என்று மனநிலையில் இருப்பதை விட ஆரம்பத்தில் கண்டு பிடிப்பதன் மூலம் குணப்படுத்தக் கூடிய வழிமுறைகள் இன்று உள்ளது என்றும் தெரிவித்தார்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி.பாமினி அச்சுதன் தலைமையில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி, கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயம், விநாயகபுரம் சிகிச்சை நிலையம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு பேரணி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தை சென்றடைந்தது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தாய்சேய் வைத்திய அதிகாரி டாக்டர்.எம்.அச்சுதன், மட்டக்களப்பு மாவட்ட தொற்று நோய் வைத்திய அதிகாரி எஸ்.நவலோஜிதன், வாழைச்சேனை மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் இ.நிதிராஜ், மட்டக்களப்பு லயன்ஸ் கழக ஆலோசகர் ஏ.செல்வேந்திரன், வாழைச்சேனை லயன்ஸ் கழக தலைவர் பொ.சிறிதரதீசன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment