(க.கிஷாந்தன்)
நோர்வூட் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 73 குடும்பங்களை 337 பேர் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலத்தில் தங்கவைப்பு. - கடும் கற்றினால் பொகவந்தலாவ பகுதியில் 150 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்.
அதிக மழைவீழ்ச்சி காரணமாக கெசல்கமுவஓயா பெருக்கெடுத்து நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெள்ள நீர் புகுந்ததனால் சுமார் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வீடுகளில் வாழ்ந்த 73 குடும்பங்களைச் சேர்ந்த 337 பேர் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தங்க வைக்கப்பட்டவர்களுக்கு அம்பகமுவ பிரதேச செயலகத்தின் இடர்முகாமைத்துவ நிலையத்தினால் சமைத்த உணவுகள், கிராமசேவகப்பிரிவு ஊடாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதே வேளை பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கையையும் பாதிப்புக்குள்ளான சேதவிபரங்கள் தொடர்பாகவும் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதே வேளை பொகவந்தலாவ கிலானி தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 16 குடும்பங்களை சேர்ந்த 40 பேர் கிலானி தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்காக நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் வைத்திய முகாம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்:டுள்ளன. பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ கொட்டியாகல, செல்வகந்த, குயினா, கிலானி உட்பட பல பிரதேசங்களில் சுமார் 150 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதத்திற்குள்ளாகியுள்ளன.
29 ம் திகதி மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை வீசிய கடும் காற்றினால் வீட்டின் கூரைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பலர் இரவு முழுவதும் நித்திரை இன்றி பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர்.
இதே வேளை இப்பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழந்துள்ளதனால் பல தோட்டங்களுக்கான பொது போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
ஒரு சில வீடுகளின் கூரைதகரங்கள் பல மீற்றர் தூரத்திற்கு வீசி எறியப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக இப்பகுதிக்கு மழை பெய்து வருவதனால் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.


Post a Comment
Post a Comment