உள்ளூராட்சித் தேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனு வாபஸ்



உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறுவதற்கு மனுதாரர்கள் தீர்மானித்துள்ளனர்.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பாக அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆறு பேரினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு கடந்த 22 ஆம் திகதி விதிக்கப்பட்ட தடையுத்தரவை நீக்குமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரினர்.
அதனடிப்படையில் அந்த இடைக்கால தடையுத்தரவை நீக்குவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.