வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள அதிக காற்றுடனான காலநிலையினால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என காலநிலை அவதான நிலையத்தினால் நேற்று முன்தினம்(4) எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும்,குறித்த எச்சரிக்கையினையும் மீறி கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்ற 25 மீனவர்கள் மன்னாரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த 25 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் நேற்று (5) ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது எச்சரிக்கையினையும் மீறி கடலுக்குச் சென்ற குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.ஜே.அலெக்ஸினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளன


Post a Comment
Post a Comment