எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கட்சிகளின் பிரசார நடவடிக்கைகள் மாத்தளை மாவட்டத்தின் பிரதான மற்றும் உப நகரங்களில் குறைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த தேர்தல்களின் போது காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதைகள், சுவரொட்டிகள் கட்அவுட்கள் என்பவற்றை இம்முறை காணமுடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்தல் முறையின் கீழ் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தொகுதி முறையின் கீழ் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் பிரிக்கப்பட்டுள்ள எல்லைகள் காரணமாக மாத்தளை மாவட்டத்தில் இம்முறை தேர்தல் பிரசார நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளது.
அத்துடன், தேர்தல் தொடர்பான வன்முறைகளும் குறைவடைந்துள்ளதாக மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
தேர்தல் சட்டதிட்டங்களை மீறுபவர்களை கைதுசெய்வதுக்காக மாத்தளை மாவட்டத்தில் விசேட வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்


Post a Comment
Post a Comment