வல்வையில் 30 M ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள்



யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 30 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
90 கிலோ கேரளக்கஞ்சா, 04 கிலோ அபின் மற்றும் 04 கிலோ ஹஷிஸ் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.