பொதுஜன பெரமுனவின் (தாமரை மொட்டு) கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றதல்லவா...அதில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்களுக்கு உரையாற்ற அனுமதி வழங்கப்படவில்லையாம். மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டுமே உரையாற்ற அனுமதி வழங்கப்பட்டதால் இதர கட்சிகளின் தலைவர்கள் மனம் நொந்து புலம்பிக்கொண்டிருப்பதாகத் தகவல்.
விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கோட்டாபயவின் நண்பர்கள் என்பதால் அவர்களின் உரை தேவையில்லையென தாமரை மொட்டை இயக்கும் ராஜபக்ஷ ஒருவர் உத்தரவிட்டிருந்தாராம்.
இதற்கிடையில் கட்சித் தலைவர்கள் அறிமுகம் செய்யப்பட்டு வைக்கும் நிகழ்வின்போது மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தனவின் பெயர் சொல்லப்படும்போது யாருமே கரகோஷம் செய்யவில்லையாம். அது ஏன்? அதற்குப் பின்னால் இருந்தது யார்? என்பது மர்மமாம்.


Post a Comment
Post a Comment