பேரியல் அஷ்ரப் சேவைகளில், 5 வீதமான சேவையைக் கூட , தற்பொழுது பிரநிதிகளினால் செய்யவில்லை



(அஷ்ரப் ஏ சமத்)
முன்னாள்அமைச்சா் பேரியல் அஷ்ரப்அமைச்சராக பதவி வகித்த 6 வருடத்திற்குள் அவா் அம்பாறை கரையோர பிரதேசங்களில் செய்த சேவைகளினை  தற்பொழுது   மக்கள் நன்றாக அனுபவிக்கின்றனா்.  அவருக்கு  பின்னா் ஆட்சிக்கு வந்து மக்களின் வாக்குகளை பெற்று அமைச்சா்களாகவும்  மக்கள் பிரநிதிகளாகவும் கடந்த 10வருடங்களுக்கு மேல் பல பிரநிதிகள்  உள்ளனா்.     அப்பிரதேசங்களில்  பேரியல் அஷ்ரப் அவா்கள் செய்த சேவையைில்   ஆக்க குறைந்தது  5 வீதமான சேவையைக் கூட   அம் மக்களுக்கு தற்போதைய பிரநிதிகளினால் செய்யவில்லை என்றே கூறலாம்

 - பேரியலின் சேவைகள் - அஸ்ரப் வைத்தியசாலைக்கு பெயா்மாற்றி மத்திய அரசுக்கு கொண்டுவந்தமை,  இஸ்லாமபாத்தில்  தொடா் மாடி வீடமைப்புத்திட்டம், மருதமுனை வைத்தியசாலை , மருதமுனை பாடசாலைகளை கரைவாகுக்கு கொண்டு வந்தமை,  கல்முனை, சாய்ந்தமருது  கல்முனைக்குடி போன்ற பிரதேசங்களில் கரைவாகு நிலங்களை பெற்றுக் கொடுத்து அதனை மண்நிரப்பி பாரிய வீட்டுத்திட்டங்களை ஏற்படுத்தியமை - பெரியநீலாவனை மருதமுனை தொடா்மாடி வீடமைப்புத் தி்ட்டம்  கல்முனை வலயக் கல்விப் பணிமனைக்குத் தனியானதொரு  அலுவலகம் - கல்முனை பிராந்திய சுகாதார அலுவலகம்,  கல்முனை தேசிய வீடமைப்பு அபிவிருத்திதனியானதொரு அலுவலகம்,  சாய்ந்தமருது வைத்தியசாலை,  மல்ஹருஸ் சம்ஸ்  அல்ஹிலால், அல்ஜலால்  றியாளுஜன்னாஹ் பாடசாலைகள் புதிதாக நிர்மாணித்தமை  இஸ்மாயில் புரம் மல்வத்தை வீடமைப்புக் கிராமம்  நித்தவுர் அட்டப்பழம் வீடமைப்புத்திட்டம்,  அட்டாளைச் சேனை விவயா விஸ்தரிப்பு நிலையம்,  பொத்துவில் வைத்தியசாலை, நுரைச்சோலை வீடமைப்புத்திட்டம்,   அட்டாளைச்சேனை வீடமைப்புத்திட்டம்,  சாய்ந்தமருது பேலிபேரியன் வீடமைப்புத்திட்டம்,  கல்முனைக்குடி தொடா் மாடி வீடமைப்புத்திட்டம்,  காரைதீவு சுகாதாரப் பணிமனை , மாவடிப்பள்ளி சுகாதார நிலையம்  அம்பாறை மாவட்ட கரையோர நீா் விநியோகத்திட்டம்,   அக்கரைப்பற்று இறக்காம வீதியில் வீடமைப்புத் திட்டம்,  சம்மாந்துறை தொழில் நுட்பக் அருகில் விவசாய விஸ்தரிப்பு உப அலுவலகம்,  கல்முனைககுடியில்  3 பாடசாலைகள்,  கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம், கல்முனை நுாலகத்தில் அம்பாறை மவாட்ட மேலதிக அரசாங்க அதிபா் பணிமனை,  540 பேர் தொண்டா் ஆசிரியா்களை நிரந்தரம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் நியமனங்கள்,  அம்பாறை மாவட்டத்தில் வாழ்ந்த அரச உத்தியோகத்தா்களுக்கு ஹோமகவில் அரச வீடுகள் 50 பெற்றுக் கொடுத்தமை,  காரைதீவு பாடசாலை அபிவிருத்தி  தற்பொழுது பஞ்சிகாவத்தை மாளிகாவத்தையில்  ஜம்மியத்துல் உலாமா சபைக்கு  தனது அமைச்சின் கீழ் இருந்த தேசிய வீடமைப்புக்  அதிகார சபைக்குச் சொந்தமாக இருந்த காணியை வழங்கி தற்பொழுது உலமா சபை கட்டிடம் நிமிா்ந்து நிற்கின்றது.  இது போன்ற பல சேவைகள் அவா் செய்துள்ளாா்.   இவைகள் மக்களின் மனதில் மறைக்கடிககப்பட்டதா அல்லது அவா்கள் மறந்து வாழ்கின்றனரா ?