#Irsaath.
முல்லைத்தீவு நீதிமன்ற முன்னாள் காவலாளியும்,தமண பிரதேச செயலக இன்னாள் சிற்றுாழியருமான அக்கரைப்பற்று முருகன் கோவில் வீதி, பிரசன்னா விபத்தில் சிக்கியுள்ளார்.
இவர் தமன அலுவலகத்திலிருந்து, இன்று மாலை வீடு திரும்பும் வழியில் அக்கரைப்பற்று 8ம் கட்டையடியில் தான் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளிலில் இருந்து வீழ்ந்து கிடந்துள்ளார். துடித் கிடந்த இவரை பாதையால் பயணித்த வாகனச் சாரதி ஒருவர் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியாசாலையில் அனுமதித்துள்ளார்.இவர் பற்றிய தகவல்களை குடும்ப உறவினர்களுக்கு தெரியப்படுத்த அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டுமுள்ளனர்.
அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில்,முதற்கட்ட சிகிச்சையளிக்கப் பட்டு மேலதிக ஸ்கேன் பரிசோதனைக்கென, அக்கரைப்பற்று ஆதார வைத்தியாலைக்கு இவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


Post a Comment
Post a Comment