அக்கரைப்பற்று பிராந்திய நீர் வழங்கல், அதிகார சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று நண்பகல் முதல் நீர் வெட்டு வழமை போல முன்னறிவிப்பின்றி இடை நிறுத்தப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று முதல் மருதமுனை சம்மாந்துறையின் சில பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அக்கரைப்பற்றில் மாத்திரம் 16 000 இணைப்புக்களைக் கொண்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது பற்றிப் பாவயைாளர்களுக்கு எந்த வித அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை. பொது மக்களின் நலனில் அக்கறை கொண்ட #CEYLON24 தமது #Twitter செய்தியில் சுட்டிக்காட்டியது. இதன் பிறகும் அறிவிப்புக்கள் சம்மந்தப்பட்ட தரப்புக்களால் வெளியிடப்படவில்லை.
இன்று மாலை, சுமார் 3.30 அளவில் பிராந்தியப் பொறியியலாளருடன் தொடர்புற்ற போது, கொண்டுவட்டுவான் நீர்ப் பம்பி மின்சாரமற்றிருப்தனால்,தடை ஏற்பட்டுள்ளதாக பொறியியலாளர் எடுத்துக் கூறியுள்ளார். விரைவில் நீர் கிடைத்து விடுமென்றும் அறிவித்துள்ள
இயந்திரக் கோளாறு, மின் பிறப்பாக்கித் தடை, போன்றவை ஏற்படுவதுண்டு.
ஆனால், ஆகக் குறைந்தது,அது பற்றி அறிவிக்காமையே இங்குள்ள குறைபாடாகும்.
கரையோரப் பிரதேசத்தில் மாத்திரம் சுமார் 80 000 இணைப்புக்கள் உள்ளன. அக்கரைப்பற்று நீர் வழங்கல் சபையின் சமூக வலைத்தள @waterakp இல் 2320 பேர் பின் தொடருகின்றனர்.ஆனால், நீர்த் தடை பற்றிய அறிவி்ப்புக்கள் வெளியாகவில்லை.
இன்று மாலை 4.58 இற்கு வெளிவந்த அறிவித்தல்.
Due to a power failiure in Konduwatuwan Treatment plant water supply interuppted. Supply will resume soon.
நவீன தொலைத் தொடர்புகள், வளரச்சியடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில், தகவல்களை உரிய வேளைக்குத் தராமல், நுகர்வோரது தொலைபேசி அழைப்புத் தொல்லை தாங்க முடியாமல், தகவல்களை வழங்குவது காலங் கடந்த ஞானோதயம்.
நீர் வழங்கல் அதிகார சபை தமது நுகர்வோர்கள் கட்டணம் செலுத்தாத வேளையில், தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நீர் வெட்டுக்களை துண்டிக்கின்றனர். ஆனால், கொண்டு வெட்டுவான் நீர்ப் பம்பியிலோ, அல்லது வேறு எ்ங்கேனும் உடனடித் திருத்த வேலையெனின் அது பற்றி சந்தா தார்களுக்கு அறியத் தராமல் இருப்பது, நுகர்வோரின் அடிப்படை உரிமையினை மீறும் செயப்பாடாகும்.
நீர் வழங்கல் சபையின் பிராநதிய முகாமையாளரே, அமைச்சர் ஹக்கீமே இது உங்கள் கவனத்திற்கு!


Post a Comment
Post a Comment