இஸ்ரேலின் தாக்குதலில், பலஸ்தீனர்கள் பலி



இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் மற்றும் நான்கு பாலத்தீனர்கள் வெள்ளிக்கிழமையன்று கொல்லப்பட்ட பெரிய சண்டைக்குப் பின்னர், காசா எல்லையில் ஓரஅமைதி நிலவுகிறது.
ஐக்கிய நாடுகள் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தம் மூலம் இஸ்ரேலுக்கும், ஹமாஸூக்கும் இடையில் பின்னிரவில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.


எல்லையில் ஊடுருவ பாலத்தீன தீவிரவாதிகளால் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறிய இஸ்ரேல் ராணுவம், அதற்கு பதிலடியாக ஹமாஸ் நிலை ஒன்றில் டாங்கி தாக்குதல் நடத்தியது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயலாக அமைந்தது.