அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் இராஜினாமா



அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

அவுஸ்திரேலியாவின் ஆளும் லிபரல் கட்சியின் புதிய தலைவராக அண்மையில் தேர்வு செய்யப் பட்ட ஸ்கொட் மெரிசன் வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராகத் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். 

மேலும் இவர் அடுத்த வருடம் 2019 இல் அவுஸ்திரேலியாவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரை அந்நாட்டுப் பிரதமராகப் பதவி வகிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.