நியமனம்



(அப்துல்சலாம் யாசீம் )

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் சபையின் தலைவராக  எம்.எம்.சுணில் புஞ்சிபண்டார  இன்று (25) கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு  மாகாணத்தில் போக்குவரத்து துறையில் பாரிய அபிவிருத்திகளையும்  மக்களின் நலன் கருதி  மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கும் நோக்கிலேயே  தங்களை நியமிப்பதாக ஆளுநர் நியமனக்கடிதத்தை வழங்கி வைத்த போது  தெரிவித்தார்.

 மாகாண வீதிப்பயணிகள்  போக்குவரத்து துறையில்  தூர இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகள் மற்றும்  போக்குவரத்து துறையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சிணைகள் , தற்போது காணப்படுகின்ற குறைபாடுகளை இணங்கண்டு சிறந்த சேவையினை வழங்குவதாகவும்  வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் இதன் போது குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தண மற்றும் இணைப்புச்செயலாளர் நிமால் சோமரத்ன ஆளுநரின் ஆலோசகர் கேன் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.