(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை உவர்மலை கடற்கறையில் "கவனர் ஜெட்டி" ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் KENICHI SUGANUMA வினால் இன்று (07) மாலை 6.30மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் ஆளுநர் நிதியிலிருந்து புணர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்த இறங்குதுறை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் கிழக்கு மாகாண ஆளுநர்கள்,வெளிநாட்டு தூதுவர்கள் கடல் மார்க்கமாக பார்வையிட செல்வதாயின் கடற்படை முகாமுக்குள் சென்றே பயணிக்க வேண்டியிருந்தது.
தற்போது இந்த இறங்கு துறை ஆரம்பிக்கப்பட்டமையினால் ஆளுநர் வாசஸ்தலத்திற்கு முன்னாலேயே படகு மூலம் பயணிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் அசங்க அபேவர்தன.கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்


Post a Comment
Post a Comment