அச்சக பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில்



அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டதாகவும், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புதிய நியமனங்கள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, வேலை நிறுத்தம் ஒன்றை அரசாங்க அச்சக பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். 

அரசாங்க அச்சக பணியாளர்கள் இன்றும் (06) நாளையும் (07) இந்த வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர். 

இந்நிலையில் தமது கோரிக்கைகளுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றால் தமது வேலை நிறுத்தம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.