திருகோணமலை மாவட்ட புற்று நோய் நலன்புரிச்சங்கம்





(அப்துல்சலாம் யாசீம் )

திருகோணமலை மாவட்டத்தில் புற்று நோயினால்  பாதிக்கப்பட்டுள்ள  நோயாளர்களின் நலன் கருதி  "திருகோணமலை மாவட்ட புற்று நோய் நலன்புரிச்சங்கம்" எனும் பெயரில்  புதிய சங்கமொன்று  இன்று (பதினாறாம் திகதி)  அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.


திருகோணமலை பொது வைத்தியசாலை புற்று நோய் சிகிச்சைப்பிரிவின் வைத்திய நிபுணர் சசிகலா பரமகுலசிங்கம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் அனூசியா ராஜ்மோகன்  வைத்திய நிபுணர் கனேகபாகு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தலைவராக பீ.ஜனரஞ்சன்  செயலாளராக  பீ.போரம்  பொருளாளராக  பீ.சசிகலா உபதலைவராக பீ.சக்திபவன் உதவிச்செயலாளராக ஏ.பீ.புடில் மற்றும் உறுப்பினர்களாக சிஸ்டர் ரத்னி ,மைக்கல்,ஜனாப் ,ஹுஸைன்  எஸ்.ஜயவீர எம்.பீ.ரோஹினி , டொக்டர் பீ.சுரேஷ் கந்தவேல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் போது இந்த சங்கத்தின் ஊடாக வறுமையின் வாழும் நோயாளர்களுக்கு உதவுவதுடன்  வைத்தியசாலையில் காணப்படுகின்ற புற்று நோய் சிகிச்சை பிரிவை  தயமுயர்த்தி இன்னும் அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்றுக்கொடுப்பதே எமது சங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய சேவையாகும் எனவும் தலைவர் இதன் போது குறிப்பிட்டார்.

அத்துடன்  மாவட்டத்தில் அனைத்து பிரதேசங்களுக்கும் சென்று புற்று நோய் பற்றிய விழிப்புணர்களை நடாத்துவதாகவும் தீர்மாணிக்கப்பட்டது.