(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை நகர்பகுதியிலும், நகரை அண்மித்த பகுதிகளிலும் ஒவ்வொரு விடுமுறை தினங்களிலும் சிரமதானப்பணிகளும் இலவச மருத்துவ முகாம்களும் கடந்த மாதங்களாக இடம் பெற்று வருகின்றது.
மக்களின் வாக்குகளை பெற்ற நாங்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கு உரித்துடையவர்கள் என்ற சிந்தனையை அரசியல் வாதிகளுக்கு தௌிவூட்டும் விதத்தில் திருகோணமலையில் பிரபல சமூக சேவகரும் வைத்திய கலாநிதியுமான டொக்டர் ஈ.ஜீ.ஞானகுணாளன் செயற்பட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை கிராமங்களுக்கு
நேரடியாகச்சென்று கேட்டறிந்து கொண்ட சமூக சேகவர் அரச சேவையில் வைத்தியத்துறையில் பல சாதனைகளை படைத்ததுடன்
பல நிறுவனங்கள் மூலமாக தொண்டராக செயற்பட்ட இவர் தற்போது திருகோணமலை மக்கள் மத்தியில் பெறும் செல்வாக்கை பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.
இதனடிப்படையில் காடுகளாக காட்சியளித்த கன்னியா மயானம் அன்புவளிபுரம் மயானம் போன்ற மயானங்களை துப்பரவு செய்து விட்டு இன்றைய தினம் அலஸ்தோட்டம் இந்து மயானத்தில் காணப்பட்ட காடுகளை அகற்றி எமது மயானத்தை நாமே பாதுகாக்க வேண்டும் என்ற விடயத்தை மக்கள் மத்தியில் தௌிவு படுத்தி இளைஞர்களின் உதவியுடன் மயானத்தை துப்பரவு செய்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
இதனையடுத்து தற்பொது அரசியல் வாதிகள் புதிதாக தெரிவு செய்யப்பட்ட வைத்திய கலாநிதி டொக்டர் ஞானகுணாளனின் பொதுச்சேவையை கண்டு மற்றைய அரசியல் வாதிகளும் சமூக சேவையில் ஈடுபட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் வாதிகள் இனிவரும் காலங்களில் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கா விட்டால் தேர்தலின் போது வாக்களிக்க மாட்டோம் எனவும் எச்சரித்து வருவதையும் காண முடிகின்றது.
எனவே திருகோணமலை மாவட்டத்தில் மட்டுமல்ல முழு இலங்கையிலுமுள்ள அரசியல் வாதிகள் மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கோரிக்கை விடுப்பதுடன் அரசியல் வாதிகள் மக்களுக்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் எனவும் கோருகின்றனர்.


Post a Comment
Post a Comment