(அப்துல்சலாம் யாசீம்)
மட்டக்களப்பு ஐயந்திபுர பௌத்த மத்திய நிலையத்தின் நிர்மாணப்பணிகளுக்காக கிழக்கு மாகாண ஆளுநர் நிதியிலிருந்து இன்று (புதன்கிழமை பதினைந்தாம் திகதி) ஆளுநரின் இணைப்புச்செயலாளர் நிமால் சோமரத்னவினால் காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
இக்காசோலையை ஜயந்திபுர பௌத்த மத்திய நிலையத்தின் பொறுப்பாளரான பட்டபொல குணானந்த நாயக்க ஹிமி பெற்றுக்கொண்டார்.
இதில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் உதவிச்செயலாளர் உதயகுமார் சிவராஜா மற்றும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அனுர திஷாநாயக்கவும் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு ஜயந்திபுர பௌத்த மத்திய நிலையத்தின் பொறுப்பாளர் கருத்து தெரிவிக்கையில் ஆயிரத்தி தொலாயிரத்தி ஜம்பத்தாறாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிலையமானது அக்கிராம மக்களின் நிதி சேகரிப்பின் மூலமே ஆரம்பத்தில் நிர்மாணிக்கப்பட்டது.
இதனையடுத்து கிழக்கில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்து வரும் ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் நிர்மாணப்பணிகளுக்காக வேண்டி உதவி வழங்குமாறு கோரிய வேளை தனது நிதியிலிருந்து பணத்தை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
இதேநேரம் மிக விரைவில் நிர்மாணப்பணிகளை ஆரம்பிக்குமாறும் கூறிய அவர் விகாரைகளுக்கு
மட்டுமல்லாது கிழக்கு மாகாண அனைத்து இன
மக்களின் அபிவிருத்திக்காகவும் தான் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இந்நிதியினை வழங்கியமைக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும் பௌத்த மத்திய நிலையத்தின் விகாராதிபதி இதன் போது தெரிவித்தார்.

Post a Comment
Post a Comment