எதிர்க்கட்சி தலைவர் பதவியில் மாற்றம் இல்லை



பாராளுமன்றத்தின் தற்போதைய விதிமுறைகளுக்கும் அரசியலமைப்புக்கும் அமைய எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற அமர்வுகள் இன்று (10) ஆரம்பமான போதே சபாநாயகர் கரு ஜயசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.