எமது நாட்டில் பெற்றோலிய கூட்டுத்தாபனமே திறைசேரிக்கு அதிக வரியை செலுத்தும் நிறுவனமாகும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் ஆகிய நிறுவனங்களில் 25 ஆண்டுகள் திருப்த்திகரமான சேவையை பூர்த்தி செய்த ஊழியர்களை கொளரவப்படுத்தும் முகமாக அவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கும் நிகழ்வின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவிக்கையில், ´திறைசேரிக்கு 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தொகையானது 148 பில்லியன் ரூபா ஆகும். 2017 ஆம் ஆண்டு 148 ரூபா பில்லியன் ஆகும். ஆறுமாத காலத்திற்குள் 2018 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதத்திற்குள் 68 ரூபா பில்லியன் செலுத்தப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் எண்ணம் உள்ளது கூட்டுத்தாபன ஊழியர்களே அதிக சம்பளம் பெறுபவர்கள் என்ற எண்ணம் காணப்படுகின்றது. எனினும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது கூட்டுத்தாபன ஊழியர்களுக்குப் பின்னால் உள்ள கஷ்டங்கள். பெற்றோலிய கூட்டுத்தாபனம் என்பது வெறும் பெற்றோலை நிரப்பும் நிலையம் அல்ல. அவர்களது கடின உழைப்பு காரணமாகவே நாங்கள் அதிக வரியை திறைசேரிக்கு கொடுக்கின்றோம். நிறைய பேர் எதிர்பார்க்கின்றனர் கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டாவிட்டால் அதனை தனியார் மயப்படுத்த வேண்டும் என்று.
எனினும் நாம் துறைமுகத்தில் இருந்த வேலையில் அதனை ஒரு இலாபம் ஈட்டும் இடமாக மாற்றி அமைத்தோம். அதே போலவே கூட்டுத்தாபனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாகவும் மக்களுக்கு அதிக சேவை செய்யும் நிறுவனமாகவும் மாற்றமடையும். நான் இருக்கும் வரைக்கும் இந்த நிறுவனத்தை பாதுகாப்பேன்´ என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Post a Comment
Post a Comment