மாவடிப்பள்ளி பிரதேசத்தில்,மைதானத்தை அமைக்க கோரி



சம்மாந்துறை, பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாவடிப்பள்ளி பிரதேசத்தில்,  விளையாட்டு மைதானமொன்றை அமைத்துத் தருமாறுகோரி, அப்பிரதேச விளையாட்டுக் கழகங்கள், பொது அமைப்புக்கள், பொது மக்கள் ஒன்றிணைந்து இன்று (23) பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.
சுமார் 1050 குடும்பங்கள் வாழ்ந்துவரும் இக்கிராமத்தில், 12க்கும் மேற்பட்ட விளையாட்டுக் கழகங்கள், பல இளைஞர் கழகங்கள் இயங்கிவருகின்ற நிலையில், மிக நீண்டகாலமாக விளையாட்டு மைதானமொன்று அமையப்பெறாமையானது, பாரிய குறைபாடகவே இருந்துவருவதாக மாவடிப்பள்ளி சமூக அமைப்பின் தலைவர் யூ.எல்.எம்.அமீன் தெரிவித்தார்.
மேலும், இக்குறைப்பாடு ​தொடர்பாக, உரிய அதிகாரிகள், பிரதேச சபை, அரசியல்வாதிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.