மாணவர்கள் நலன் கருதி பஸ்களை செலுத்துவதற்காக இராணுவத்தினர்



உயர்தரப் பரீட்சைக்கு செல்வதற்காக மாணவர்கள் நலன் கருதி பஸ்களை செலுத்துவதற்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

புகையிரத ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. 

அதேநேரம் புகையிரத பருவகால சீட்டை வைத்துள்ள பயணிகள் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் இலவசமாக பயணிக்க முடியும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.