அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட இளைஞர்களுக்கு எதிராக முறைப்பாடு



வரலாற்று சிறப்பு மிக்க பிதுரங்கல ரஜமஹா விகாரைக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடு ஒன்று கிடைக்கபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

புனித பூமியை அவமதிக்கும் வகையில் செயற்பட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பிதுரங்கல ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் தானியகம ஆனந்த தேரர், சீகிரியா பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். 

சீகிரியாவிற்கு அருகில் உள்ள பிதுரங்கல கல் மீது ஏறி இளைஞர்கள் சிலர் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர். 

இந்த புகைப்படம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பாரிய சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது. 

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய சீகிரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.