(க.கிஷாந்தன்)
அட்டன் நகரில் நவீன முறையில் மூன்று மாடிகளை கொண்ட தொழில் திணைக்களத்தை அமைப்பதற்கான அடிக்கல்நாட்டும் வைபவம் 30.09.2018 அன்று காலை அட்டன் தொழில் திணைக்கள வளாகத்தில் இடம்பெற்றது.
சுமார் 8 கோடி ருபா செலவில் இக்கட்டிடத்தை புனரமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்மு் நிகழ்வில் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், தொழில் திணைக்கள ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் இதில் கலந்து கொண்டனர்.
அம்பகமுவ பிரதேசத்தில் அட்டன் நகரில் அமைக்கப்பட்டுள்ள தொழில் திணைக்களம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள போதிய வசதி இல்லை என்பது கடந்த காலங்களில் சொல்லப்பட்டு வந்த நிலையில் இந்த கட்டிடத்தை நவீன மயப்படுத்தி இப்பிரதேச மக்களுடைய தொழில் உறவு சம்மந்தப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மூன்று மாடிகளை கொண்ட இந்த கட்டிடம் 8 கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.


Post a Comment
Post a Comment