வீடொன்றில் போதைப்பொருள் வர்த்தக செற்பாடுகளை முன்னெடுத்துவந்த நபரொருவரை, கைது செய்ய சென்றிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று கலேவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸார் இருவரும், கலேவெல மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கவேவெல பொலிஸ் நிலைய அதிபர் பொலிஸ் பரிசோதகர் நிலங்க பெர்னாண்டோவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று சந்தேகநபரை கைது செய்ய முயற்சித்த போது, சந்தேகநபர் உள்ளிட்ட மேலும் சிலர் இணைந்து பொலிஸாரை பொல்லால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Post a Comment
Post a Comment