இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3-1 என தொடரை கைப்பற்றியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் 6 ரன்களில் ஆட்டமிழக்க , ரோகித் சர்மாவுடன் இணைந்து விளையாடிய அணித்தலைவர் விராட் கோலி, அணி எளிதில் வெற்றி பெற உதவினார்.
AFP
56 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளின் துணையோடு, 63 ரன்களை எடுத்த ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் இருந்தார். கோலி 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- ரோகித் சர்மா, ராயுடுவின் அசத்தல் சதங்களும், இந்தியாவின் மெகா வெற்றியும்
- ‘ரோகித் இருந்தால் போதும், எந்த சேசிங்கும் எளிதுதான்’
- கடைசி பந்தில் டை ஆனது: இந்தியா-மேற்கிந்திய தீவு ஒரு நாள் கிரிக்கெட்
ஒரு விக்கெட் இழப்புக்கு 14.5 ஓவர்களில் வெற்றி இலக்கான 105 ரன்களை பெற்ற இந்தியா அமோக வெற்றி பெற்றதுடன் தொடரையும் வென்றது. இந்த ஆட்டம் மூன்றே மணி நேரத்தில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
AFP
31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மேற்கிந்திய தீவுகள் 104 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை எடுத்தார். பூம்ரா மற்றும் கலீல் அகமது தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.
ஆட்ட நாயகனாக ரவீந்திர ஜடேஜா அறிவிக்கப்பட்டார்.
இந்த ஒருநாள் தொடரில் 450க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த விராட் கோலி தொடரின் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெல்ல, நான்காவது ஒருநாள் போட்டியில் 224 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி 'டை'-யில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment