பாறுக் ஷிஹான்
கிழக்கு மாகாணத்தில் உள்ள சந்தைகளில் எலுமிச்சைகாய் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக மருதமுனை நற்பிட்டிமுனை பாண்டிருப்பு கல்முனை கல்முனைக்குடி சாய்ந்தமருது மாளிகைக்காடு காரைதீவு பகுதிகளில் உள்ள சந்தைகளில் இன்றைய தினம்(2) மிகச் சிறிய எலுமிச்சங்காய் ஒன்றின் விலை ரூபா 50 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதற்கு காரணம் உற்பத்தி வீழ்ச்சியும் வெளி இடங்களில் இருந்து எலுமிச்சங்காய் கொண்டுவரப்படுவதனால் தான் இவ்விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு சிறிய எலுமிச்சங்காய் விலை சடுதியாக அதிகரித்தமை குறித்து நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
தற்போது சந்தைகளில் ஒரு கிலோ எலுமிச்சங்காய் விலை ரூபா 800 முதல் வரை விற்பனையாகிறது.இரு வாரங்களுக்கு முன்னர் 100 ரூபாவிற்கும் குறைவான விலையில் எலுமிச்சங்காய் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment