#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும் நீதிவான் நீதிமன்ற நீதிபதியுமான திரு.பீற்றர் போல் எதிர்வரும் 2019 ஜனுவரி முதல் இடமாற்றம் பெற்று யாழ் நீதிமன்றுக்குச் செல்கின்றார். இதனை முன்னிட்டு அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்தினால்,இராப் போசன விருந்துடன்கூடிய பிரியாவிடை வைபம், நேற்று இரவு அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி றசீட் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், அக்கரைப்பற்று நீதிமன்றில் தொழில் புரியும் சட்டத்தரணிகளும்,கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஆரிப் சம்சுடீன் உட்பட கிழக்கு மாகாணத்தின் முதுபெரும் சிரேஸ்ட சட்டத்தரணியாகிய தாஹா செய்னுதீன் உட்பட சிலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கடந்த இரண்டு வருடங்களில், நீதிபதி பீற்றர் போல் அவர்கள் மிகவும் சிறப்பான பணியாற்றியதாக அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி றசீட் தமது தலைமை உரையில் குறிப்பிட்டார்.
இவ் வைபவத்தில்,சட்டத்தரணிகள் எம்.ஐ.உவைசுர்ரஹ்மான், தாஹா செய்னுதீன், ஜெமீல்,ஆரிப் சம்சுடின், கலைவாசனா,யுலோச்சனா, எ.எச.சமீம், எஸ்.எம்.ஏ கபுர், கே.சமீம், சம்சுதீன் ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளில் கௌரவ நீதிபதி பீற்றர் போல், மக்களையும் சட்டத்தரணிகளையும், நீதிமன்ற உத்தியோகத்தர்களையும் மிகவும் சிறந்த முறையில் ஆற்றிய பணிகள் பற்றி எடுத்தியம்பினர்.
ஏற்புரை நிகழ்த்திய கௌரவ நீதிபதி பீற்றர் போல், ”இங்கு எனக்கு முன் உரையாற்றிய முதுபெரும் சட்டத்தரணி தாஹா செய்னுதீன் உட்பட சிரேஸ்ட சட்டத்தரணிக்கள், கனிஸ்ட சட்டத்தரணிகள் அனைவரும் என் கடந்த இரண்டு வருட காலப் பணிகளைப் பாராட்டினர்”.
”நானோ ஆசிரியராகப் ஆரம்பத்தில் பணி புரிந்தேன். பல துறைசார் விற்பன்னர்களை உருவாக்கினேன். பல்கலைக் கழகத்தில் சென்று 5 வருடங்கள், படித்திருந்தேன். 7 வருடங்களில் மேல் நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் சட்டத்தரணியாகத் தொழில் புரிந்துள்ளேன். சுமார் 11 சட்டத்தரணிகளை் என் மூலமாக, உருவாக்கப்பட்டுள்னர். சுமார் 170 வரு்டங்கள் கொண்ட இலங்கையின் மலையக வரலாற்றில் சுமார் 3 பேர் வரை நீதிபதிகளாக வந்துள்ளனர்”.
”அக்கரைப்பற்று நீதிமன்றானது எனக்குப் பல்கலைக்கழகமாகவே தென் படுகின்றது.இதனால்தான் என்னவோ, புதிய நியமனம் பெறும் நீதிபதிகளை முதல் கடமையினைப் பொறுப்பேற்கும் நீதிபதிகளை அண்மையில், அக்கரைப்பற்றுக்கே அனுப்புகின்றனர்.
இங்கு முதுபெரும் சிரேஸ் சட்டத்தரணி தாஹா செய்னுதீனின் தோன்றும் வழக்குகளில், செய்யும் விண்ணப்பங்களில் இருந்து ஒரு கலையைக் கற்றேன். சிரேஸ்ட சட்டத்தரணி அப்பாஸி செய்யும் குறுக்கு விசாரணையில்,இன்னுமொரு அணுகு முறையைக் காண்பேன், சட்த்தரணி், லத்தீப் இனது அமைதியாக மனு விண்ணப்பங்கள்,சட்டத்தரணிகள் சமீம் பஹீஜ் ஆகியோர் செய்யும் கோரிக்கைகளிலும், இப்படியெல்லாம குறுக்கு விசாரணைகள் செய்ய முடியும் என்பதனைக் கற்றேன். ஓய்வு நிலை நீதிபதி சந்திரமணி, கலாநிதி கபுர் போன்றோர்கள் செய்கின்ற விண்பங்கள் பல்கலைக் கழகத்தில் நான் படித்ததைவிட ஏராளமான புதுப்புது விடயங்களை எனக்குப் படித்துந் தந்த பல்கலைக் கழகமாக அக்கரைப்பற்று நீதிமள்றம் என் மனதில் நீங்கா இடம் பெறும்”.
”இது போன்று கனிஸ்ட சட்டத்தரணிகள் செய்யும் விண்ணப்பங்களையும் செவியேற்பேன். என்னுடைய காலப் பகுதியில் நீதிமன்றத்துக்கோ நீதிபதிக்கோ, அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் எவ்விதமான சங்கடங்களுக்கும் நீதிபதிகளை ஆட்படுத்தாது, மிகவும் பண்பாக பக்குவமாக, எம்மை வழிநடத்தியுள்ளனர்.இவ்வாறானதொரு செயற்பாடு எனது ஆளுமைகளையும் திறன்களையும் மேலோங்க வழி வகுக்குமென்பது எனது மேலான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்பதாகவும் தெரிவித்து தமது உரையினை நிறைவு செய்தார்.

Post a Comment
Post a Comment