வரவு செலவு திட்டம், பெப்ருவரி 5 இல்

இவ்வாண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தை பெப்ரவரி மாதம் 5ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதென அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது பற்றி கலந்துரையாடப்பட்டது. 

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்தார். 

வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். 

(அரசாங்கம் தகவல் திணைக்களம்)


--- Advertisment ---