பொலிஸ் நிலைய அதிபர்கள் 72 பேருக்கு இடமாற்றம்


பொலிஸ் நிலைய அதிபர்கள் 72 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

சேவையின் அவசியம் கருதி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

இடமாற்றம் பெற்றவர்களுள் 27 பிரதான பொலிஸ் பரிசோதகர்களும் 45 பொலிஸ் பரிசோதகர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.