சின்ன உல்லையில், சிறிய சகோதரரன் கொலை, மூத்த சகோதரர் தாக்கியதால்


(றிஹானுத்தீன்)
பொத்துவில் சின்ன உல்லைப் பகுதியினைச் சேர்ந்த முஹம்மது இப்றாகிம் ஜெலீல் கடுங்காயங்களுடன்  பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 11 மணியளவில், சகோதரர்களுக்கிடையில் சொத்துப் பிரச்சினை எழுந்துள்ளது. வாய்த் தர்க்கம் முற்றிய நிலையில் மூத்த சகோதரர், தம்பியினை போத்தலால் தாக்கியுள்ளார்.

கடுங்காயமுற்ற குறித்த இளையவரான தம்பியானவர் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பபட்டு உயிரிழந்துள்ளார்.

ஜனாசா தற்சமயம் பொத்துவில் வைதியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


--- Advertisment ---