எம்.பி.பதவியைத் துறந்து ஆளுனர் அரியாசனத்தில் ஹிஸ்புல்லாஹ்

05 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

அதன்படி மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியும் கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதுதவிர வடமத்திய மாகாண ஆளுநராக சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண ஆளுநராக மைத்திரி குணரத்ன மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக பேசல ஜயரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளள.


Advertisement