சம்பள ​அதிகரிப்பு,அரச ஊழியர்களுக்கு



அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 2500 ரூபாயிலிருந்து 10,000 வரை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சம்பள அதிகரிப்பானது இந்த மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுமெனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அரசின் ஆரம்பப் பணியாளர்களின் அடிப்படைச் சம்பளம் 2500 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் உயர்மட்ட அதிகாரிகளின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இன்று வரை அரச பணியாளர்களின் சம்பளம் 85 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.(